Advertisement

ஆவணங்களின்றி கடத்தப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல்!

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி சாலையில் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி தலைமையில் துணை வட்டாட்சியர் சுரேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணப்பா ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக கிரானைட் கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் மடக்கினர். லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரிந்தது. 2 லாரிகளில் இருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 3 கிரானைட் கற்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X