Advertisement

பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 14 ஆண்டு சிறை!

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST

Share

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெய்கணேஷ் என்பவரை போக்சோ சாட்டத்தில் கைது செய்தனர். வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி சுபத்திராதேவி தீர்ப்பு வழங்கினார். 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஜெய்கணேஷூக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் , 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசாரை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X