Advertisement

கல்கி பிறந்த ஊரில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க ரசிகர்கள் உற்சாகம்

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST

Share

தமிழ்நாட்டில் ரசிகர்களால் அதிகம் விரும்பி படிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக இன்று தமிழகம் முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது. எழுத்தாளர் கல்கி பிறந்த கிராமமான புத்தமங்கலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது. இங்கு பொன்னியின் செல்வன் படம் பார்க்க ரசிகர்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினார். இதில் முன்னாள் ராணுவ வீரரான பன்னீர்செல்வம் பொன்னியின் செல்வன் நாவலை அதிக முறை படித்ததாகவும் காவிரி நதியை ஒட்டி நடைபெறும் இந்த கதை அமைப்பு மயிலாடுதுறை, கொள்ளிடம் பகுதிகளை சுற்றி நடப்பது தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் 66 வயதான நிலையில் இந்த படம் மிகுந்த ஆவலை தூண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார். ரசிகர்கள் சிலர் பொன்னியின் செல்வன் என்ற டி-ஷர்டுடன் படம் பார்க்க ஆர்வத்துடன் வந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X