மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவையடுத்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது மின்துறை ஊழியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இன்று 3-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் துறை ஊழியர்கள் கூறும்போது, நேற்று நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார். பேட்டி அருள்மொழி ஊழிய சங்க ஒருங்கிணைப்பாளர் வாய்ஸ் ஓவர் மின் துறை ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதுடன் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்
வாசகர் கருத்து