Advertisement

பிரபல கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 01,2022 | 00:00 IST

Share

சென்னை புளியந்தோப்பு காந்திநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கின்ற சேட்டு இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் ரஞ்சித் என்பவரை கொலை செய்த விவகாரத்தில் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X