சம்பவம் அக்டோபர் 02,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் பாலாஜி.இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த பாலாஜி, 12ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்தார். யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஜினியர் பாலாஜி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து