Advertisement

கஞ்சா வியாபாரி கொலை வழக்கு 5 பேர் கைது!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 00:00 IST

Share

சென்னை புளியந்தோப்பு காந்திநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கின்ற சேட்டு. அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மர்ம கும்பல் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர். கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் ரஞ்சித் என்பவரை கார்த்திகேயன் கொலை செய்துள்ளார். பழி வாங்கும் நோக்கில் ரஞ்சித்தின் அண்ணன் பிரேம் நண்பர்களுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று இரவு மெரினா பீச் பகுதியில் பதுங்கி இருந்த வியாசர்பாடி நரேஷ் குமார், கொடுங்கையூர் சேலவாயில் சுகுமார், சௌகார்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், யானைகவுனியைச் சேர்ந்த பிரேம்குமார், புளியந்தோப்பு நாய் கடி கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X