Advertisement

பெருமாள் அலங்காரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன்

நவராத்திரி வீடியோ அக்டோபர் 02,2022 | 13:26 IST

Share

நவராத்திரி விழாவில் மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் பெருமாள் அலங்காரத்தில் Uக்தர் களுக்கு காட்சி அளித்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயில் இத்திருக்கோயில் வாஸ்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது இத்திருக்கோயிலில் நவராத்திரி விழா செப் 26ம் தேதி தொடங்கியது . விழாவின் அக் 1 ம் தேதி யான இன்று அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் " பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகார உலா வந்தது தொடர்ந்து அறம் வளர்த்த நாயகி பெருமாள் அலங்காரத்தில் ஆடி வந்தது பக்தர்களை பரவசம் அடைய செய்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய் யபட்டுஅலங்கார தீபாரதனை மற்றும் பஞ்சமுக தீபாரதனை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X