Advertisement

இலவச பஸ் வேண்டாம் பெண் ஆவேசம்!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 00:00 IST

Share

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழரசி என்ற பெண் , பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம், பெண்கள் இலவசமாக பயணிப்பதால் நடத்துனரும் ஓட்டுனரும் மதிப்பதில்லை, என்றார். பஸ் ஸ்டாப்பில் இருந்து தள்ளி நிறுத்துவது, ஏளனமாக பேசுவது என பல வகைகளில் பெண்கள் அவமானப் படுத்தப்படுகிறார்கள். இலவச பயணம் தேவை இல்லை, கூடுதலாக பஸ்களை விடுங்கள் என ஆவேசமாக கூறினார். அவர் கூறிய கருத்துக்கு அங்கிருந்த பெண்களும் ஆமோதித்து பேசியது கிராம சபை கூட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X