மாவட்ட செய்திகள் அக்டோபர் 03,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது நாக துர்கை அம்மன் அருள்பீடம். நவராத்திரி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஏழாம் நாளில் நாக துர்க்கையம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று 1லட்சத்து 57ஆயிரம் புதிய ரூபாய் நோட்டுக்களினால் அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து