மாவட்ட செய்திகள் அக்டோபர் 03,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் உள்ளனர். கூலி தொழிலை நம்பியுள்ளனர். இங்குள்ள திரௌபதி அம்மன் கோயிலின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கு, கூலி தொழிலுக்கு அந்த வழியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்தது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் தீண்டாமை சுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து