மாவட்ட செய்திகள் அக்டோபர் 03,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த அப்துல் ரஷீத் உள்ளார். 15 வார்டு உறுப்பினர்களை கொண்ட இந்த பேரூராட்சியில் 118 தெருக்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 26 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் 10 பேர் உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களான இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணிக்கு செல்லாமல் பேரூராட்சி அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மாத சம்பளத்தை வழங்கினால் மட்டுமே பணி செய்யப்போவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து