பொது அக்டோபர் 03,2022 | 11:30 IST
தமிழகத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம், 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு பிரீமியம் 399 ரூபாய். விபத்தில் மரணம் அடைந்தால் பாலிசிதாரர் குடும்பத்துக்கு 10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தால், 30 முதல் 60 ஆயிரம் வரை தரப்படும். மருத்துவனையில் அட்மிட் ஆகியிருந்தால், ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். ஆன்லைனில் பதிவு செய்தால், தபால்காரர் வீட்டுக்கே வருவார். விரல் ரேகை, பிரிமியம் தொகை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்குவார்.
வாசகர் கருத்து