மாவட்ட செய்திகள் அக்டோபர் 03,2022 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம்,ஆரோவில் கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் வருவர் இந்நிலையில், நேற்று ஆரோவில் கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணியரின் வருகை அதிகம் வந்தனர் கடல் நீர் மட்டம் திடீரென உயர்ந்து, 300 மீட்டர் துாரம் வரை கரையை நோக்கி வந்ததால் சுற்றுலா பயணியர் ஓட்டம் பிடித்தனர். கோட்டக்குப்பம் போலீசார் சுற்றுலா பயணியரை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தினர். மணற்பரப்பில் கடல் நீர் சூழ்ந்ததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வாசகர் கருத்து