மாவட்ட செய்திகள் அக்டோபர் 04,2022 | 00:00 IST
நீலகிரி பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடினர். இதையொட்டி காந்தியடிகள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. காந்தி சேவா மைய தலைவர் நவுசாத், சுற்றுச்சூழல் மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், டாக்டர் பகத்சிங், நிர்வாகி இந்திரஜித் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து