Advertisement

இட தகராறில் வாலிபரை தாக்கிய திமுக. பிரமுகர்

மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST

Share

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காத்திருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகலாதன்.36. லாரி டிரைவர். இவருக்கும், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. காத்திருப்பு, இரட்டை வாய்க்கால் அருகில் அரசு புறம்போக்கு இடத்தை பிரகலாதன் வேலி அமைத்து பயன்படுத்தி வந்தார். முன் விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் வேலியை அகற்றினார். அதனை பிரகலாதன் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த மணிமாறன், அவரது மகன் அருண், தம்பி சிற்றரசன், உறவினர் வீரமணி ஆகிய 4 பேர் பிரகலாதனை தாக்கினர். படுகாயம் அடைந்த பிரகலாதன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பேறுகிறார். பாகசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X