மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஒபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான சூர்யா சிவாவுக்கு நித்யானந்தா சுவாமி 'கைலாசா தர்மரட்சகர்' விருதை ஆன்லைன் மூலம் வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இந்து மதத்தின் புகழை ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்வதற்காக சூரியா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கிதாக கைலாசா ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். திருச்சியில் செய்தியாளர்களை சூரியா சிவா சந்தித்தார். நித்யானந்தா சுவாமிகள் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை, என்றார்.
வாசகர் கருத்து