மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST
கோவை மேற்கு தொடர்ச்சிமலை தடாகம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தடாகம் மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது. வனத்துறையினர் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காளையனூர் திருவள்ளுவர் நகர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறுத்தை ஓய்வெடுத்து கொண்டிருந்ததை கிராம மக்கள் பார்த்து அச்சமடைந்தனர். வனத்துறையிடம் தெரிவித்தனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து