மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ளது திகனாரை கிராமம். இங்குள்ள பிரசித்திபெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது . ரங்கசாமி - மல்லிகார்ஜுனா சாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தை அடைந்தது. தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது. தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து