Advertisement

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி.. வளைகாப்பு விருந்து நிகழ்வில் சோகம்..!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST

Share

திருவாரூர் அருகே, புலிவலம் அடுத்த, திருவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லதுரை. இவரது மகன் விக்னேஷ்,29. இவரது மனைவி மாரியம்மாள்,26. இவர்களுக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மாரியம்மாள், கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து, 5ம் தேதி, மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உறவினர்கள், 20 கலந்து கொண்டனர். விழா முடிந்து, மாரியம்மாள் பெற்றோர் வீடான அடியக்கமங்கலம் கிராமத்தில் இருந்து, 5 வகையான சாதங்கள் பரிமாறப்பட்டன. இத்துடன், சிக்கன் பிரியாணியும் போடப்பட்டது.. இந்நிலையில், விருந்து சாப்பிட்ட, வேளுக்குடியைச் சேர்ந்த,10 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், செல்வமுருகன்,24 என்ற வாலிபர் இறந்தார். சிகிச்சை பெற்ற 5 பேர் வீடு திரும்பினர். விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகையால் பாதிப்பு ஏற்பட்டதா என, போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X