மாவட்ட செய்திகள் அக்டோபர் 13,2022 | 00:00 IST
ஈரோடு மாவட்டம், சுங்கக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் யுவராணி. வயது 36 இவரது கணவர் வெளியூரில் உள்ளார். மின்துறையில் பணியாற்றும் யுவராணிக்கு மகனும், மகளும் உள்ளனர். தனியார் பள்ளியில் படிக்கின்றனர். மகன் சரியாக படிக்கவில்லை, இதுனால் அவனை சத்தியமங்கம், பள்ளிக்கு மாற்றி விடுதியில் தங்கி படிக்க கூறினார். போக மாட்டேன் என தாயுடன் 14 வயது மகன் சண்டை போட்டான். கண்டிப்பாக போகவேண்டுமென்றார் யுவராணி ஆத்திரமடைந்த மகன் தூங்கிக் கொண்டிருந்த தாயை பூந்தொட்டியால் தாக்கினான். இதில் யுவராணி இறந்தார். போலீசார் மகனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
வாசகர் கருத்து