மாவட்ட செய்திகள் அக்டோபர் 13,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்லிக் கம்பை அரசு உயர்நிலைபள்ளியில் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் அம்ரீத் தலைமை வகித்தார். வன அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். மருத்துவ அரங்குகள் மற்றும் சிகிச்சை முறைகளை அமைச்சர் பார்வையிட்டார். அவர் கூறுகையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து