மாவட்ட செய்திகள் அக்டோபர் 13,2022 | 00:00 IST
கோவை பாரதியார் பல்கலை மற்றும் கே.ஜி. கலை அறிவியல் கல்லுாரி சார்பில் கோ கோ போட்டி சரவணம்பட்டி கே.ஜி. கல்லுாரி மைதானத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரத்தினமாலா துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட 32 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டியில் எஸ்.என்.எம்.வி. கல்லுாரி அணி, 17 - 16 என்ற புள்ளிக் கணக்கில் கோபி வெங்கடேஸ்வரா கல்லுாரி அணியை வென்றது. சத்யமங்கலம் சசூரி கல்லுாரி அணி 18 - 17 என்ற புள்ளிக் கணக்கில் உடுமலை அரசு கலை கல்லுாரி அணியை வென்றது. கூடலுார் அரசு கலை கல்லுாரி அணி 17 - 7 என்ற புள்ளிக் கணக்கில், கோபி அரசு கலை கல்லுாரி அணியை வென்றது. கே.பி.ஆர். கல்லுாரி அணி 16 - 8 என்ற புள்ளிக் கணக்கில் சி.எம்.எஸ். கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்று போட்டிக்கு முன்னேறின.
வாசகர் கருத்து