மாவட்ட செய்திகள் அக்டோபர் 13,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக எல்லையை ஒட்டிய சீரால், நூல்புழா பகுதிகள் நடமாடும் புலி 10 மாடுகளை தாக்கி கொன்றது. தினமும் 6 மணிக்கு மேல் தமிழக - கேரளா சாலைகளில் புலி ஹாயாக உலா வருவதால் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புலி சுல்தான்பத்தேரி பஜாரை ஒட்டிய தொடப்பன்குளம் என்ற இடத்தில் வீட்டு மதில் சுவரை தாவி குதித்து செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். மயக்க ஊசி போட்டு புலியை பிடிக்கவும் கால்நடை மருத்துவக்குழு தயாராக உள்ளது.
வாசகர் கருத்து