மாவட்ட செய்திகள் அக்டோபர் 14,2022 | 00:00 IST
அண்ணாத்த' படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் கடலுார் அருகே நேற்று துவங்கியது. கடலுார் அருகே அழகியநத்தம் தென்பெண்ணையாற்று பாலம் பகுதியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியுடன் துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். ரஜினி பட ஷூட்டிங் நடப்பதாக தகவல் பரவியதால், , ரஜினி ரசிகர்கள், மக்கள், ஷூட்டிங் நடந்த இடத்திற்கு ஆர்வமுடன் சென்றனர். ஆனால்,. 1 கி.மீ., துாரத்திலேயே, தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அவர்கள் ரஜினியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வாசகர் கருத்து