மாவட்ட செய்திகள் அக்டோபர் 14,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பந்தலூர் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் முரளி, ஸ்ரீகலா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் துவக்கி வைத்தார். சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். ரத்த பரிசோதனை, ஸ்கேனிங் வசதி செய்யப்பட்டிருந்தது. திரளானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை டாக்டர் அனுசுயா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி செய்திருந்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நடைபெற்றது.
வாசகர் கருத்து