மாவட்ட செய்திகள் அக்டோபர் 15,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன்.25. இவரது பைபர் படகில் பூவரசன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்.60, தென்னரசன்.30 உள்ளிட்ட 6 மீனவர்கள் 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கினர். படகில் இருந்த வலைகள் மற்றும் மீன்களை எடுத்துச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 6 மீனவர்களும் இன்று காலை கரைத் திரும்பினர். அவர்களை உறவினர்கள் பொறையாறு மருத்துவமனையில் சேர்த்தனர். பொறையாறு போலீசார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து