மாவட்ட செய்திகள் அக்டோபர் 17,2022 | 00:00 IST
திருவாரூர், மன்னார்குடி அருகே காசாங்குளத்தில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் யாராவது இறந்தால், அடக்கம் செய்ய கோரைஆற்றை கடந்துதான் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும். ஆற்றை கடக்க சிறிய பாலம் இருந்தது. மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அந்த பாலம் அகற்றப்பட்டது. சுடுகாட்டுக்கு செல்ல ஆற்றில் இறங்கிதான் செல்ல வேண்டி உள்ளது. சாமிநாதன் என்பவர் இறந்தார். அவரது உடலை பாடையில் தலைக்கு மேல் தூக்கி கொண்டு ஆற்றில் இறங்கி கடந்தனர். ஆற்றை கடக்க முடியாதவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடிவதில்லை. சுடுகாட்டுக்கு செல்ல வசதியாக புதிய பாலம் வேண்டுமென கிராம மக்கள் கேட்கின்றனர்.
வாசகர் கருத்து