மாவட்ட செய்திகள் அக்டோபர் 21,2022 | 00:00 IST
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே பொடாரிக்காடு வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த மூன்று நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். ஊத்துப்பள்ளம், கோம்பை, கஸ்தூரி கோம்பை, பரிகம், ஜருகு, அஜ்ஜிப்பட்டி, கமலநத்தம், உள்ளிட்ட கிராமங்களில் வன விலங்குகள் வேட்டைக்காக சிலர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மப்டி உடைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து