மாவட்ட செய்திகள் அக்டோபர் 22,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலமூலா போலீஸ் மற்றும் வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இன்ஸ்பெக்டர் சித்ரா வரவேற்றார். டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமை வகித்தார். ஊட்டி மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் பங்கேற்றார். குழந்தை திருமணம் தடுப்பு, போக்சோ குற்றங்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என பேசினார். பழங்குடி மக்களுக்கு புத்தாடை, தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டன. ஊட்டி டி.எஸ்.பி. மனோஜ்குமார், சங்க நிர்வாகிகள் சந்திரன், சுரேஷ், எஸ்ஐ அசோக்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஏட்டு சித்தராஜ் செய்திருந்தார்.
வாசகர் கருத்து