மாவட்ட செய்திகள் அக்டோபர் 23,2022 | 00:00 IST
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமம் உள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு பகுதியிலிருந்து யானைகள் விரட்டியடிக்கபட்டாலும், வேறு பகுதிக்கு சென்று அட்டகாசம் செய்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து