மாவட்ட செய்திகள் அக்டோபர் 23,2022 | 00:00 IST
கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஜமோசா முபின் என்ற நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இவர்மீது வழக்குகள் எதுவும் இல்லை. கோட்டைமேட்டிலுள்ள ஹாஜி முமகமது பிள்ளை ராவுத்தார் வீதியிலிருக்கும், இறந்தவரின் வீட்டில் மாலை 6 மணி முதல் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் ஒரு குழுவினர் இறந்தவரின் வீட்டிலிருந்து, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிப்பதற்கான பொருட்கள், கைப்பற்றியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜமோசா முபின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து