மாவட்ட செய்திகள் அக்டோபர் 27,2022 | 00:00 IST
திருச்சி மாவட்ட போக்குவரத்து துணை கமிஷனர் அழகரசு. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக திருச்சி வில்லியம் சாலையில் உள்ள அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.
வாசகர் கருத்து