மாவட்ட செய்திகள் அக்டோபர் 30,2022 | 00:00 IST
புதுச்சேரி அக்கார்டு ஹோட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 300 கிலோ கேக் தயாரிப்பு பாரம்பரிய முறையில் துவங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்வு நடைபெற்றது. 100 கிலோ பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன. நிகழ்வில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் ஓட்டல் வாடிக்கையாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கேக் வழங்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து