மாவட்ட செய்திகள் அக்டோபர் 30,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் நூற்றாண்டுகளை கடந்த ராஜாஜி மார்கெட் இயங்கியது. காஞ்சிபுரம் பெரு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து 7 கோடி மதிப்பீட்டில் ராஜாஜி மார்கெட் புதிதாக கட்டமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போ எதிரே 210 கடைகளுடன் தற்காலிக மார்கெட் அமைக்கப்பட்டது. இதனை மேயர் மகாலட்சுமி திறந்து வைத்தார். நாளை முதல் காய்கறி விற்பனை துவங்குகிறது. துணை மேயர் குமரகுருபர நாதன், ஆணையர் கண்ணன், மண்டலக் குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ராஜாஜி மார்கெட் வியாபாரிகள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து