மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 7 ஆண்டுகள் கழித்தே 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விடுதலை கிடைத்தது. ஆனாலும் முழுமையான அதிகார மாற்றம் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தான் நடந்தது. எனவே,முழு அதிகாரம் கிடைத்த ஆகஸ்ட் 16ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வந்தது புதுச்சேரி அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று 2014 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அப்போதிருந்த என்.ஆர். காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி இன்று புதுச்சேரி அரசின் சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. கொட்டும் மழையில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மற்றும் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு விழா பேரூரையாற்றினார்.
வாசகர் கருத்து