மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
ஈரோடு மாவட்டம் கோபி-சத்தி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த டூவீலரில் 3 பேர் வந்தனர். அவர்களை மடக்கிய போது ஆளுக்கு ஒருபுறம் தப்பியோடினர். ஓடும் போது ஒரு பையை சாக்கடைக்குள் வீசி சென்றனர். போலீசார் விரட்டி சென்றதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆண்டிக்கரையை சேர்ந்த கனகராஜ் என்பவர் பிடிபட்டார். சாக்கடைக்குள் வீசிச்சென்ற பையை சோதனை செய்த போது, பூட்டு மற்றும் கதவை உடைக்க தக்க ஒன்றரை அடி நீளமுள்ள மூன்று ஆயுதங்கள் இருந்தது. கனகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. தப்பியோடிய மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து