மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் 2015 ஆம் ஆண்டு நடு பரவனாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறிஞ்சிப்பாடி வட்டம் அரங்கமங்கலம், மறுவாய் கல்குணம், பரதம்பட்டு மற்றும் புவனகிரி வட்டத்தில் கரைமேடு எல்லைகுடி டிவி நல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நபார்டு திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். வெள்ள தடுப்பு சுவரின் மூலம் 4800 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் வடிகால் வசதி பெறும்.
வாசகர் கருத்து