மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 20:05 IST
தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகின்றன. தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் கட்டமைப்புகள் தரம் உயர்த்தப்பட்டாலும் போதிய பாதுகாப்பு இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பொருள்களை சேதபடுத்தியும் கண்காணிப்பு காமிரா உள்ளிட்ட பொருள்களை திருடிச் செல்கின்றனர். காவலாளிகளை பணி அமர்த்துவதில் அரசிடம் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் மாவட்ட துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்கதையாகிவிட்டது.
வாசகர் கருத்து