பொது நவம்பர் 02,2022 | 00:38 IST
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார். கடந்தாண்டு அக்டோபரில், 45 வயதில் மாரடைப்பால் காலமானார். சமூக சேவையால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருக்கு கர்நாடக அரசின் ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூரில் நடந்தது. அவரது மனைவி அஸ்வினியிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை விருதை வழங்கினார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். புனித் கடவுளின் குழந்தை. அந்த குழந்தை நம்முடன் சில நாட்கள் தங்கி விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தி மீண்டும் கடவுளிடம் சென்றுவிட்டது என்றார். சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என ராஜராஜேஸ்வரி, அல்லா, ஏசுவை கேட்கிறேன் என்றும் ரஜினி கூறினார்.
வாசகர் கருத்து