மாவட்ட செய்திகள் நவம்பர் 02,2022 | 00:00 IST
கோவை பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான மாணவிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டி சரவணம்பட்டி குமரகுரு கல்லுாரியில் நடந்தது. இப்போட்டியில் 10 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் சுற்றுப் போட்டியில் பி.கே.ஆர். கல்லுாரி அணி முதலிடம், கோபி அரசு கல்லுாரி அணி இரண்டாமிடம், பாரதியார் பல்கலை அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. (smart jo app)
வாசகர் கருத்து