மாவட்ட செய்திகள் நவம்பர் 03,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் உதகை-கூடலூர் ஹைவேயில், ஹிந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை அருகில் O.C.S.காலனி உள்ளது சில தினங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் உலாவிய புலி, மாடு ஒன்றை கொன்றது. இப்போது, மீண்டும் இன்னொரு மாட்டை கொன்று, அதன் அருகிலேயே நின்றது. போட்டோ தொழிற்சாலை மூடப்பட்டதால், புதர்கள் நிறந்து காணப்படுகின்றன. இதனால் புலி, கரடி, சிறுத்தை வந்து செல்வதாக O.C.S.காலனிவாசிகள் அச்சத்துடன் கூறினர். வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து