மாவட்ட செய்திகள் நவம்பர் 05,2022 | 00:00 IST
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் அருகில் உள்ள சுற்றுச்சுவர் மீது சாய்ந்தது . சுற்றுச்சுவர் இடியும் நிலையில் இருந்தது. இதனால் வனத்துறை அனுமதி பெற்று மரம் அகற்றப்பட்டது. அப்போது மர கிளையில் காக்கை ஒன்று கூடுகட்டி தன் 3 குஞ்சுகளை பராமரித்து வந்தது தெரிந்தது. மரம் வெட்டப்பட்டதால் காக்கை குஞ்சுகள் கீழே விழுந்தன. அதனை பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி பரிவுடன் எடுத்து தனது அறையில் வைத்து பராமரித்தார். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட நிலையில் காலை, மாலை நேரத்தில் பள்ளிக்குச் சென்று குஞ்சுகளுக்கு உணவூட்டி தாயுள்ளத்தோடு பாதுகாத்தார். பின்னர் நேற்று வனத்துறை ஊழியரை பள்ளிக்கு வரவழைத்து 3 குஞ்சுகளையும் ஒப்படைத்தார். தாய் பாசத்துடன் குஞ்சுகளை பராமரித்து அவற்றுக்கு உணவு ஊட்டியதை வனத்துறை ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானது. அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தாயுள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்
வாசகர் கருத்து