மாவட்ட செய்திகள் நவம்பர் 05,2022 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகேந்திரா கல்வி நிலையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மத்திய அரசின் உயர்கல்வி துறையும் தென் மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியமும் சேர்ந்து முகாமை நடத்தின. 2, ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட டிகிரி, டிப்ளோமா முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி மற்றும் அதற்குப் பிறகு வேலை வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஹூண்டாய், டிவிஎஸ் உள்பட 60க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் வந்து அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர்.
வாசகர் கருத்து