மாவட்ட செய்திகள் நவம்பர் 06,2022 | 00:00 IST
சென்னை மாநகரில் கொடுங் குற்றங்களில் ஈடுபட்ட 18 பேரை கடந்த ஒரு வாரத்தில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், நன்னடத்தையுடன் செயல்படுவதாக எழுதிக்கொடுத்து, ஜாமீனில் திரிந்த 7 குற்றவாளிகளையும் சென்னை மாநகர போலீசார், இந்த ஒரு வாரத்தில், குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சென்னையில், இந்த ஓராண்டு மட்டும், இதுவரை 408 பேர் குண்டாஸில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகர போலீஸ் துணை ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து