அரசியல் நவம்பர் 06,2022 | 20:48 IST
புதுச்சேரியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி பேசினார். அப்போது மேடையில் இருந்த உள்ளூர் நிர்வாகிககள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். டென்ஷனான சிவா, அவர்களை கீழே அமர்ந்து கவனிக்க சொல்ல, சேர்கள் கீழே இறங்கின. இளைஞர்கள் சிலர் செல்போனில் மூழ்கி இருந்தததையும் கவனித்தார். அவர்களிடம் நேற்று என்ன படம் ரிலீசானது என கேட்டார். சினிமாவை 2 மணிநேரம் அமைதியாக பார்க்கிறீர்கள்; அதை விட பொறுமை இங்கு தேவை என சொல்லி பயிற்சியை தொடர்ந்தார். திருச்சி சிவா எம்பி டென்ஷனாகி பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது
வாசகர் கருத்து