மாவட்ட செய்திகள் நவம்பர் 07,2022 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு செய்யார் சாலையில் பழமை வாய்ந்த உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை ,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்டவை யாகசாலையில் நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து