அரசியல் நவம்பர் 13,2022 | 16:07 IST
கோவை மாவட்டம் வால்பாறையில் இயங்கி வரும் டேன் டீ Tan Tea நிறுவனத்தை மூடுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதனால் சின்கோனா, பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் விஷன், உபாசி ஆகிய இடங்களில் தேயிலை தோட்டங்களில் வேலைபார்க்கும் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அரசின் முடிவை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வால்பாறை அமுல் கந்தசாமி, கூடலூர் ஜெயசீலன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் போராட்டம் நடத்த அதிமுகவினர் திரண்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமுல் கந்தசாமி, ஜெயசீலன் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து