மாவட்ட செய்திகள் நவம்பர் 13,2022 | 00:00 IST
திருச்சி துறையூரில் தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கம் சார்பில் உலக மருந்தியல் வார விழா, ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் என முப்பெரும் விழா சங்கத்தின் மாநில தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கோவிட் ஊக்கத்தொகையை அனைத்து இயக்குனரக மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மற்றும் மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து