மாவட்ட செய்திகள் நவம்பர் 14,2022 | 17:33 IST
குழந்தைகள் தினத்தில் ஆசிரியர்களும் குழந்தைகளாகி, மகிழ்ந்த சம்பவம் புதுக்கோட்டையில் நடந்தது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரோஜா மலரும், இனிப்பும் கொடுத்து வரவேற்றனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளை நினைவில்கொண்டு, நடந்த குழந்தைகள் தினத்தில், நேரு படத்திற்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர். ஆசிரியர் ஒருவர், பாடல் வரிகளைச் சொல்ல, குழந்தைகளும் திருப்பிச் சொல்லி நேருவின் நினைவில் திளைத்தனர்.
வாசகர் கருத்து